#தென்னையில் இடை உழவு செய்வதன் பயன்கள்
தென்னையில் இடை உழவு வருடத்திற்கு இருமுறை செய்வது நல்லது. ஜீன் -ஜீலை மதங்களிலும் மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களிலும் மரங்களுக்கு இடையே உழுவது அவசியம். இப்படி உழுவதால் களைகள் வளர்வதை கட்டுப்படுத்தலாம்.
மேலும் சத்துக்கள் எளிதில் மரங்களுக்கு கிடைக்கும். இடை உழவு செய்வதால் வேர்களுக்கு நல்ல காற்றோட்டமும் கிடைப்பதுடன், புதிய வேர்களின் வளர்ச்சியும் துரிதப்படுத்தப்படுகின்றன. மற்றும் மழைநீர்; ஓடாமல் தடுக்கவும் முடியும்.
உழவு செய்யும் பொழுது சணப்பு, தக்கப்பூண்டு விதைத்துவிட்டு பூ பூக்கும் சமையத்தில் மடக்கி உழவு செய்தால் சத்துக்கள் எளிதாக தென்னைக்கு கிடைக்கும் ஈரப்பதத்தையும் தக்கவைத்துக் கொள்ளும்.
No comments:
Post a Comment