புரட்சி தெரியுமா புரட்சி?
இன்றும் நாம் நடைமுறைப்படுத்தத் தயங்கும் விதவை மறுமணத்தை வலியுறுத்திய முதல் தமிழன் மகாகவி பாரதி!
பாரதி எழுதி முற்றுப்பெறாத 'சந்திரிகையின் கதை' என்ற நாவலில் விதவை மறுமணத்தை வலியுறுத்துகிறார். கோமதி என்ற பெண் தன் மரண காலத்தில், அருகிலிருந்த விசாலாக்ஷி என்பவளிடம் கூறுகிறாள்...
''... நீ விவாகம் செய்துகொள். விதவாவிவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண் களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஜீவனுள்ள வரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை! ஆதலால், நீ ஆண்மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய், அங்கு கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் ஸபையாரைக் கண்டு பிடித்து, அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி, வாழ்க்கைப்படு..!''
- 'சந்திரிகையின் கதை' முதல் அத்தியாயத்தில்!
(ஆனந்த விகடன் - 13.9.1964)
Saturday, December 10, 2016
முதல் தமிழன் மகாகவி பாரதி!
Labels:
தமிழர் வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment