நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668):
===========
இயற்பெயர்: இராஜசிம்மன்.
பட்டம்சூடிய பெயர்: நரசிம்மவர்மன்.
சிறப்பு பெயர்: மாமல்லன்&க்ஷத்ரியசிம்மன்.
வீரம் : மல்யுத்தம் செய்வதில் வில்லன்.
-----------------
பல்லவர் வரலாற்றில் அரிய கலைப்படைப்புகளை உருவாக்கிய முதல் மகேந்திரவர்மனின் மகன் இவன்.
தந்தையைப் போலக் கலையார்வமும்,தனக்கே உரிய போர் வீரமும் கொண்டு விளங்கியவன்.
பல்லவ வரலாற்றில் இவனுகெனச் சில தனிச்சிறப்புகள் உண்டு.
=============
நரசிம்மவர்மனின் தனிச் சிறப்புகள்:
=============
1. ஹர்ஷவர்த்தனை வென்று புகழ் ஏணியில் நின்ற இரண்டாம் புலிகேசியைப் வெற்றி கொண்டதால் "வாதாபி கொண்டான்" எனப் புனைப்பெயர் கொண்டவன்.
----------------------
2. தனது கடல்படையின் வலிமையால் இலங்கையை வெற்றி கொண்டவன்.
----------------------
3. அரியகலைப் படைப்பு எனவும் திறந்தவெளிக் கலைக்கூடம் எனவும் புகழ்ப்படும் மாமல்லப்புரத்தின் பெரும்பகுதியை உருவாக்கிய பெருமை உடையவன்.
-----------------------
4. சீனப் பயணியான் யுவான்சுவாங் இவனது காலத்தில் தான் தமிழக்கத்திற்கு வருகை புரிந்தார்.
-----------------------
5. சமணமும் பெளத்தமும் பெற்றிருந்த சிறப்பிடத்தைச் சைவமும் வைணவமும் சிறப்பு பெற்று விளங்கிய காலம் இது.
-----------------------
6. மகேந்திரன் காலத்தில் தொடங்கிய சைவ வைணவ மறுமலர்ச்சி நரசிம்மன் காலத்தில் முழுமை எய்தியது.
-----------------------
No comments:
Post a Comment