*முக்கிய சில செயல்முறைகள்*
🌴விதை நெல்லை சேமிக்கும் போது முதல் மூணு வாரம் முக்கியமானது . கொஞ்சம் ஈரம்பதம் இருந்தாலும் பூச்சிநோய் தாக்கி மொத்த விதைகளும் வீணாகும். அறுவடை செஞ்சதும் நல்லா காயவைத்து காய்ந்த வேப்பம் தழை வசம்பு போட்டு கட்டி வைக்கணும். மூணு மாசத்துக்கு ஒரு தடவை சூரிய ஓளியில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும் விதைகளை கண்காணித்து கொண்டு இருக்க வேண்டும்.
🌴காய்கறி விதைகள் கொஞ்சமாக இருந்தா சாணியிலே வரட்டி தட்டி அதில் விதைகளை பதிய வைத்து வெயில்ல காய வைக்க வேண்டும் தேவைப்படும் போது விதையை தட்டி எடுத்து விதைக்கலாம்.
🌴நிலகடலை விதையை பூச்சி அரிக்காமல் இருப்பதற்கு நைலான் சாக்குல ஒரு அடிக்கு நிலக்கடலை அடுத்து ஏழு எட்டு கற்பூரவில்லை. பிறகு ஒரு அடிக்கு நிலக்கடலைனு மாத்தி மாத்தி நிரப்பி கட்டி வைக்கணும். இப்படி செய்தால் ஏழு மாசம் வரைக்கும் கூட பூச்சி வராது.
🌴உருளை கிழுங்கு சேமிக்கும் எலி அணில் போன்றவற்றின் தொல்லை இருக்கும். அதற்கு எருக்கம் செடியை வெட்டி போட்டு வைச்சா எதுவும் அண்டாது.
🌴கொண்டை கடலை பட்டாணி போன்ற பருப்பு வகை விதைகளை பட்டும் படாம கடுகு எண்ணையில் கலந்து வைத்து சேமித்து தேவைப்படும் எடுத்து விதைக்கலாம்.
🌴விதைக்காக தானியங்களை சேமிக்க மண்பானையை புதுசா வாங்கி அதை கோமியத்தில் கழுவிட்டு ஒரு நாள் முழுக்க நிழல்ல உலர வைக்கணும் அடுத்த நாள் வெயில்ல உலர வைக்கணும். மூணாவது நாள் விதையை பானையில் கொட்டி அறைக்குள் வைத்துவிடலாம். அதிகபட்சம் இரண்டு வருடம் கூட முளைப்பு திறன் குறையாமல் இருக்கும்.
🌴தானியம் பயிறு வகைகளை சேமிக்கும் போது கூன்வண்டு தொல்லைக் கொடுக்கும். அதை தவிர்க்க ஒரு கிலோ உப்பை பத்து லிட்டர் தண்ணீரில் கரைத்து அதிலே கோணிப்பையை ஊற வைத்து பிறகு காயவிடணும். பிறகு அதிலே தானியத்தை கட்டி வைத்தால் கூன் வண்டு எட்டிகூட பார்க்காது.
🍅தக்காளி கத்திரி போன்றவற்றில் விதை சேமிக்க நல்ல திடமான பழுத்த காயை எடுத்து அதனை அறுத்து மண்பானையில் போட்டு விதை முழுகிற அளவு தண்ணீர் ஊத்தி ஊற வைக்கணும். மூன்று நாள் கழிச்சி விதைகளை அலசி எடுக்க. வேண்டும். மூணு தடவை தண்ணீர் விட்டு அலசினால் விதைகள் தனியா வந்துவிடும். வெயிலில் காய வைத்து சேமிக்கலாம்.
🍐சுரை பீர்க்கன் போன்றவற்றை கொடியிலேயே நன்றாக காய விட்டு அப்படியே எடுத்து வைக்கலாம். தேவைப்படும் போது காயை தட்டி எடுத்து விதைக்கலாம்.
🌴வெண்டைக்காய் விதை சேகரிக்க நடுபாகத்தில் காய்த்திருக்கும் வெண்டையை தேர்வு செய்து ஒரு துணிகட்டி அடையாளம் செய்து வைக்கவும்.காய் நன்றாக முற்றி வெடிக்கும் பக்குவம் வந்தவுடன் பறித்து ஒரு துணியை விரித்து அதுமேலே வெண்டைக்காய் போட்டு வெயிலே காயவைத்து நன்றாக காய்ந்தவுடன் பிரித்து தரமான விதை எடுத்து சேமிக்கவும்.
*தரமான விதை சேமிப்போம் வளமான விளைச்சலை பெறுவோம்*
*புதுசா அறுவடை செய்த விதையை பழைய விதையோட சேர்த்து சேமிக்க கூடாது. அப்படி செய்தால் புது விதையில் ஏதாவது நோய் நொடி இருந்தால் பழைய விதைக்கும் பரவிடும்*
No comments:
Post a Comment