கீரையில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு
இயற்கை மற்றும் உயர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கீரை சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
• சிறுகீரை, முளைக்கீரை, பொன்னாங்கன்னிகீரை, வெந்தையக்கீரை என அனைத்து வகை கீரையின் இலையும், தண்டும் நாம் உட்கொள்ளும் பகுதிகள்.
• இவற்றின் மீது பூச்சிமருந்து தெளிக்கக் கூடாது.
• இலை உண்ணும் புழுக்கள் தோன்றும் போதே, ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். அத்துடன் காதி சோப்பை சேர்ப்பதால், அது நீரையும் எண்ணையையும் ஒட்டும் திரவமாகப் பயன்படும்.
• இவ்வாறான முறைகளைப் பின்பற்றும்போது விவசாயிகளுக்குக் குறைந்த செலவே ஆகும்.
• மேலும், விஷமற்ற காய்கறிகளை உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்தால், அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment