Saturday, December 17, 2016

தினமும் ராத்திரி, ஒரு பொடியை பால்ல போட்டு சாப்பிடுவியே... அது எதுக்கு பாட்டி?''

தினமும் ராத்திரி, ஒரு பொடியை பால்ல போட்டு சாப்பிடுவியே... அது எதுக்கு பாட்டி?''

'அமுக்கராங்கிழங்கு பொடி. பாலில் வேக வைச்சு தூளாக்கிய பொடி. இந்தப் பொடியைச் சாப்பிட்டால், மூட்டுகளுக்கு இடையே இருக்கிற அழற்சி நீங்கி வலியும் குறையும். கூடவே நொச்சி, தழுதாழை, ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெய் அல்லது, வாத கேசரி தைலத்தில் நல்லா வதக்கி, மூட்டுக்கு ஒத்தடம் கொடுத்தாலும் வலி சீக்கிரமே போயிடும்.

கால் வலியோட வீக்கம் இருந்தால், முருங்கை இலை, தேங்காய் துருவல், வலம்புரிக்காய், ஓமம், நொச்சித்தழை, ஆமணக்கு இலை, தழுதாழை, இதையெல்லாம் ஒரு காடா துணியில் பொட்டலமாக் கட்டி ஒரு கடாயில், நாராயணத் தைலத்தை லேசாக இளஞ்சூடாக்கி, அதில் இந்த பொட்டலத்தைப் போட்டு, அந்த எண்ணெயில் லேசாய்ப் பிரட்டணும்.  அதை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலியும் போகும்; வீக்கமும் மறையும். ஆவாரை இலை, வேலிப்பருத்தி இலை இரண்டையும் தூளாக்கி, முட்டை வெள்ளைக்கரு (சைவமா இருந்தால் உளுத்தமாவு) கலந்து, மூட்டுல பத்து போட்டு அடுத்தநாள் கழுவினால் வீக்கம் மறைஞ்சிடும். 'ஃப்ரோஸன் ஷோல்டர்’ என பாடாய்ப் படுத்தும் தோள் மூட்டில் வரும் வலிக்குக் கூட இந்த பத்துதான் பெஸ்ட்.'

- சித்த மருத்துவர், கு.சிவராமன்

No comments:

Post a Comment