Friday, December 9, 2016

குழந்தைகளுக்கு Protein Rice பொடி:

Varieties of Podi by Chitra

குழந்தைகளுக்கு Protein Rice பொடி:

இது ரெண்டு வயதுக்கு மேல் தரலாம்.

பொட்டுக்கடலை – 800gm
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம், சோம்பு - தலா 100 gm
பூண்டு – ஒரு முழு பூண்டு
கறிவேப்பிலை – ஒரு பிடி
பெருங்காயம் – ஒரு பெரிய கட்டி
உப்பு – தேவையானது

மேலே சொன்ன எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி வாணலியில் தனித்தனியாக லேசாக வறுக்கவும். பூண்டை மட்டும் உரித்து தோல் நீக்கி தனியாக வறுக்கவும். மிக்சியில் பொடித்துக்கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் முதல் சாதத்தில் நெய்யுடன் பிசைந்து தர எளிதில் ஜீரணமாவதுடன் பசியைத் தூண்டி குழந்தைகள் உடம்பைத் தேற்றும்.

(குறிப்பு: நாம் செய்வது குழந்தைகளுக்காக என்பதை மறக்காமல் வறுக்கும் முன் ஓமம் போன்றவற்றை அலசி வடிகட்டி காய வைத்து பிறகு வறுக்கவும். அதில் உள்ள கல் மண் போன்றவை குழந்தைகளுக்கு பாதிப்பு விளைவிக்கலாம், அதை அவர்களுக்கு சொல்லவும் தெரியாது.)

No comments:

Post a Comment