Saturday, December 3, 2016

ஒரு கூட்டுப்புழுவை ஒருவன் பல நாட்களாக கவனித்து கொண்டிருந்தான்

ஒரு கூட்டுப்புழுவை ஒருவன் பல நாட்களாக கவனித்து கொண்டிருந்தான்
ஒரு நாள் கூட்டின் முனையில் ஒரு சிறிய தூவாரம் தெரிந்தது அதன் வழியே வெளியே வர அது போராடிக்கொண்டு இருந்தது முட்டி மோதி தவித்தது
இதை பார்த்துகொண்டிருந்தவன் ஐயோ அது வெளியே வர போராடுகிறதே என லேசாக அதை உடைத்துவிட்டான்
மறுநொடியே பட்டாம் பூச்சி வெளியே வந்து விழுந்தது
"வீங்கிய உடலோடும் சுருங்கிய சிறகுகளோடும் !!
அது எப்போது சிறகடிக்கும் என பார்த்து கொண்டே இருந்தான்
ஆனால் கடேசிவரை அதன் சிறகுகள் விரியவே இல்லை
ஊர்ந்து கொண்டுஇருந்தது
கூட்டின் சிறு துவாரம் வழியே முட்டி மோதுகையில் அதன் உடம்பில் உள்ள சிறகுகளுக்கு திரவம் பரவும் அப்போதுதான் அது வெளியே வந்தவுடன் சிறகடிக்க ஆற்றல் கிடைக்கும்
ஆனால் அதன் போராட்டம் பொறுக்காமல் உதவிய மனிதனால் அது ஊனப்பட்டு கிடக்கிறது
#இளைஞர்களே
இன்று உங்களுக்கு கை நீட்ட உறவுகள் நண்பர்கள் இல்லையே என வருத்தம் கொள்ளாதீர்கள்.
அதுவும் நன்மைதான்...
நாளை உங்கள் சிறகுகள் உங்களுக்காய் "விரியும்"....!!

No comments:

Post a Comment