Sunday, December 4, 2016

அடுத்தவர்க்கு உதவும் உயர்ந்த மனம் படைத்தவர்கள்,

புதிதாக திருமணமான இளஞ்சோடி தங்கள் தேனிலவுக்காக ஓர் அழகிய மலைப்பிரதேசம் சென்றார்கள். பேருந்தில் பயணம் செய்தவர்கள் அந்த இளஞ்சோடியுடன் நட்பாக பழகினர். இவர்கள் இறங்கவேண்டிய Resortல் நிறுத்தம் இல்லாவிட்டாலும் இவர்களுக்காக ஓட்டுனரும் நடத்துனரும் பேருந்தை நிறுத்தி Resort வாசலில் இறக்கி விட்டனர்.

இவர்கள் இறங்கியதும் பேருந்து சிறுது தூரம் போயிருக்கும்.பேரிரைச்சலுடன் பெரிய பாறை ஒன்று உருண்டு பேருந்து மீது விழுந்தது.
இந்த விபத்தில் சிலர் பலியாயினர். பலர் படுகாயமுற்றனர்.

இதை கண்ட இளஞ்சோடிகள் தேம்பி தேம்பி அழுதனர். தங்களுடன் பாசமாக பழகியவர்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே என சோகமாயினர்.

"நாம் ஏன் பேருந்திலிருந்து இறங்கினோமோ.." என அழுதுகொண்டே சொன்னால் மனைவி.

அதிர்ச்சியடைந்த கணவன் "என்ன உளறுகிறாய்? இறங்கி இருக்க விட்டால் நாமும் இறந்து போயிருப்போம்.." என கத்தினான்.

"நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை" என்ற மனைவி, "பேருந்து நம்மை இங்கு இறக்கிவிடாமல் சென்றிருந்தால், அந்த இடத்தை முன்னதாகவே கடந்திருக்கும், இந்த விபத்தும் நேர்திருக்காது" என்றாள்..
தன் மனைவியின் உயர்ந்த உள்ளதை எண்ணி கணவன் வெட்கி தலைகுனிந்தான்.

"அடுத்தவர்க்கு உதவும் உயர்ந்த மனம் படைத்தவர்கள், எப்போதும் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பார்கள்"

No comments:

Post a Comment