சோழர் (சூரிய வம்சம்) குல கொடியும் போர்கொடியும், தமிழ், சிங்கள, தென்கிழக்காசிய தொடர்பும்
தமிழில் சோழர் என்றால் அதற்கு ஒரு பொருள்தான். அதாவது, சூரிய வம்சத்தினர். ஆங்கில 'solar' என்ற சொல்லிற்கும் சோழர் என்ற தமிழ் சொல்லிற்கும் நெருங்கிய உறவு உண்டு. சொல்லப்போனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூச்சரத்தில்(குஜராத்) ஒரு பகுதியை சோழங்கி குலம் ஆண்டுவந்தது. இவர்களை கூச்சர சாளுக்கியர் என்றும் அழைத்தனர்.
சோழங்கி என்னும் சொல் தமிழ் கவிப் பேரரசர் கம்பர் காலத்திலும் வழக்கில் இருந்துள்ளது. உதாரணமாக, சோழங்க பெருமானே என்று சோழ மன்னனை குறித்து பாடல் வரி இடம்பெற்றுள்ளது.
மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களை இந்திய தீபகற்பத்தின் முனைக்குள் ஒதுக்கி வரலாறு எழுதுவதே வரலாற்று அறிஞர்கள் (தமிழ் வரலாற்று அறிஞர்கள் உள்ளடங்க) பலரின் வழக்கமாக உள்ளது. அதுமட்டுமல்ல, சிங்களவர்கள் இலங்கைக்குள் வானத்தில் இருந்து குதித்தது போல் சிங்களவர்களுக்கும் மூவேந்தர்களுக்குமானா தொடர்பை மறைத்து எழுதுவதும் வழக்கமாக உள்ளது.
சுமார் 2,300 ஆண்டுகளாக இந்திய துணைக்கண்டம் பாரிய வெளிநாட்டு படையெடுப்புக்குள் அகப்பட்டு அங்கிருந்த சனப் பரம்பல் பல்வேறு மாற்றத்துக்கு உள்ளானது . 2,300 ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய துணைக்கண்டம் முழுவதும் சோழரும் (சூரிய வம்சம்) பாண்டியரும் (சந்திர வம்சம்) மட்டுமே குடியிருந்தனர். அன்னிய படையெடுப்பால், சோழ பாண்டிய பெரும் குலத்தினர் படிப்படியாக மேற்கு, வடக்கு மற்றும் மத்திய இந்திய துணைக்கண்ட பகுதியில் இருந்து வெளியேறி, ஈற்றில் தென் இந்திய பகுதியில் இருந்தும் அகன்றனர்.
சிவபெருமானின் அருளாலும், கருணையாலும், முடிக்குரிய பாண்டிய வேந்தர்கள் தென் இந்திய பகுதிக்கு அன்னிய படையெடுப்பிற்கு முன்னரே இடம்பெயர்ந்தனர். அதுவரை தென் இந்திய பகுதி பெரும்பாலும் காடாகவே இருந்தது.
அதற்கிடையில், சூரிய வம்சத்தினர் (சோழ) அன்னிய படையெடுப்பை எதிர்த்து பாரிய தாக்குதலை மேற்கொண்டனர். சூரிய வம்ச(சோழ) குலத்தில் உதித்த மோரிய(மயூர்ய) பேரரசர் அசோகர் இந்திய துணைக்கண்டத்தை சோழர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதையும் தாண்டி மேற்கே கிரேக்கம்(Greece) வரையும், கிழக்கே தென்கிழக்காசியா முழுவதையும், தெற்கே சேர சோழ பாண்டியர்களின் எல்லை வரையும் விரிவுபடுத்தினார். இந்திய முனையில் குடியேறி இருந்த சேர சோழ பாண்டியர்களை படையெடுத்து ஒடுக்க சூரிய(சோழ) வம்ச பேரரசர் அசோகர் அவருக்கு தெரிந்த ஒரு முக்கியமான உள்ளுணர்வால் விரும்பவில்லை, இதன் காரணமாகவே அசோகர் காலத்தின் பின்னரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தெற்கு முனையில் இடம்பெயர்ந்து இருந்த சேர சோழ பாண்டியர்கள் திழைத்தனர்.
இந்திய துணைக்கண்டத்தின் மீது படையெடுத்த அன்னியர்கள் கொடூரர்களாகவும் மூர்க்கர்களாகவும் இருந்தனர், இவர்கள் பயங்கரமான உத்திகளை கையாண்டு சோழ பாண்டிய பொதுமக்களையும் சோழ பாண்டிய அரசுகளையும் மனவிரக்திக்கு உள்ளாக்கினர்.
இந்த அன்னியர்களின் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயராகும். தமிழ் திரையுலக நடிகர் கார்த்திக் சிவகுமார் நடித்த சிறுத்தை படத்தில் இந்த அன்னியர்கள் கையாண்ட ஒரு உத்தி படமாக்கபட்டுள்ளது, கார்த்தியின் ரத்னவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் அவரது குடும்பத்திற்கு நிகழும் கொடுமையே அது. ரத்னவேல் பாண்டியனின் மனைவியை கடத்தி சென்றுவிடுவார்கள்.
பெண்களை வயது பேதமின்றி இந்த அன்னியர்கள் குடும்பத்தில் இருந்து பிரித்து கொண்டுபோய் கொடுமை படுத்தினர். இதன் காரணமாக, பீதியில் பல பெண்கள் தற்கொலை செய்தனர். இதை கண்ணுற்ற பாண்டிய தளபதி ஒருவன் ஆண்கள் பெண்கள் உட்பட்ட இளைஞர்கள் பலரை படகு படகாக இந்திய தீபகற்பத்தில் இருந்து ஏற்றி இலங்கைக்கு அனுப்பினான். படகில் தப்பி சென்ற இளைஞர்கள் பலர் கடலில் மூழ்கி இறந்தனர். இவ்வாறு இலங்கைக்கு தப்பி சென்ற பாண்டியர்கள் பலரின் பரம்பரை தமிழர் மற்றும் சிங்களவராக இலங்கையில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். ஏன், இன்று இலங்கையில் உள்ள பெரும்பாலானோர் பாண்டியர்களே (சோனகர்கள், மற்றும் பிற வெளிநாட்டவரை தவிர்த்து இலங்கை தமிழர், மலையக தமிழர், சிங்களவர் அனைவரும் உள்ளடங்க).
பல பல நூற்றாண்டுகளாக சேர சோழ பாண்டிய பரம்பரையினரை இலங்கையில் கட்டிக்காத்த மூதாதையர்களின் உழைப்பு சிங்கள தமிழ் இனவாத சண்டையால் இன்று வீணடிக்கபட்டுள்ளது. இதற்கு மூல காரணம் அறியாமையும் வரலாற்று மறதியுமே. இவ்வாறு 15 இலிருந்து 16 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பாண்டிய முடிக்கான சண்டையால் (சண்டைக்கான காரணம் இருந்தது) பாண்டியர்கள் முடியிழந்து தமது உயிரை காக்க தெற்கு நோக்கி தப்பி ஓடவேண்டிய சூழ்நிலை நேர்ந்தது
அன்னிய படையெடுப்புக்கு முன்னர் இந்திய துணைக்கண்டத்தின் வடபகுதி மற்றும் மேற்கு பகுதியிலும் உலகின் ஏனைய பகுதியிலும் சோழர்களே பெருவாரியாக குடியிருந்தனர். இந்த அன்னிய படையெடுப்பு காலத்திலே இலங்கைக்கு விஜயன் அவரது நண்பர்களுடன் கரைசேர்ந்தார், இதுபோன்ற கதை தென்கிழக்காசியா மலாய் மக்களிடமும் உண்டு, எனவே சூரிய சந்திர வம்சத்தினர் தமது அரச குலத்தினரை காப்பாற்ற இவ்வாறு கப்பலில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி உள்ளனர் என்பது தெட்ட தெளிவு.
தென் இந்திய பகுதியை ஆண்ட சோழர்களின் கொடியில் இருந்த புலி சிறுத்தை (ஆசிய சிறுத்தை; Asiatic Cheetah) ஆகும். பல வரலாற்று அறிஞர்கள் தவறாக சோழரின் புலியை வரிப்புலியாக (வங்கப் புலி) வர்ணிக்கின்றனர் . இதற்கு காரணம் சோழர் கால நாணயத்தில் இருந்த சிறுத்தை(cheetah) புலியின் மேனியில் பதிக்கப்பட்ட புள்ளிகள் காலப்போக்கில் தேய்ந்து மறைந்து போனதே. மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட சோழர்காலத்து செப்பு தகடுகளில்(Chola copper plate) பொறிக்கப்பட்டிருந்த பேரரசு சோழ சின்னத்தில் சிறுத்தையின் உருவம் தெளிவாக தெரிகிறது. புலி உருவத்தில் சம அளவில் செறிந்த புள்ளிகள் காணப் படுகின்றன மற்றும் இது சிறுத்தை குந்தி இருப்பது போன்றே பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுத்தை ஆசிய சிறுத்தை ஆகும், இதில் 100 சிறுத்தைகள் மட்டுமே உலகில் (ஈரானில்) உண்டு.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென் இந்தியாவில் ஆட்சி புரிந்த சோழர்களின் கொடியில் பிரதானமாக இருந்த புலி சிறுத்தை ஆகும். இந்த சிறுத்தைகள் பெரும்பாலும் வட இந்திய காடுகளிலே வசித்து வந்தன, இதுவும் சோழ பாண்டியர்கள் வட இந்திய பகுதியில் ஒரு காலத்தில் வாழ்ந்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது.
1950 ஆம் ஆண்டளவில் சிறுத்தை புலி இந்திய துணைக்கண்டத்தில் இருந்து அழிந்து போனது, இதற்கு சிறுத்தைகள் வேட்டைக்கு பயன்படுத்தபட்டதே காரணம்.
சோழர்களின் (சூரிய வம்சம்) குல தெய்வம் திருமால்(விஷ்ணு). புத்தர் திருமாலின் அவதாரமே. பாண்டியர்களின் (சந்திர வம்சம்) குல தெய்வம் சிவபெருமான்.
கருடன் (Garuda) திருமாலின் வாகனம் எனவே கருடன் (கழுகு) சோழர்களின் போர்கொடியில் பாவிக்கப்பட்டது. குத்தர்கள் (குப்தர்கள்; Guptas) கருட சின்னத்தை பயன்படுத்தினர், இன்றும் தாய்லாந்து , இந்தோனேசியா நாடுகளில் கருட சின்னம் முக்கிய இடம் பெறுகிறது. தமிழ் நாட்டில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் தென்கிழக்காசிய மக்களின் உருவ ஒற்றுமை கொண்ட உடல் எச்சங்கள் ஈமைதாழியில் இருந்து கண்டெடுக்க பட்டதாக ஒரு கதையும் உண்டு.
சோழர்கள் தென்கிழக்காசியாவை கைப்பற்றினார்கள் என்று பெருமையான வரலாற்றை மட்டும் தமிழர்கள் கற்கின்றனர், ஒரு கணம் தன்னும் நிதானித்து தென்கிழக்காசியாவில் இன்று வாழும் மக்கள் சோழர் (சூரிய வம்சம்) பரம்பரையினரே என்ற உண்மையை சிந்தித்து உணரவில்லை.
சோழர்கள் கருடனின் கொடியும் சிறுத்தையின் கொடியும் பயன்படுத்தி உள்ளனர்.
சில ஆய்வாளர்கள் ஐரோப்பாவின் பெரும் பகுதியையும், வட ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவையும் அடக்கி ஆண்ட உரோம பேரரசு (Roman Empire) சோழ (சூரிய வம்சம்) வழித்தோன்றல் என்று திண்ணமாக நம்புகின்றனர். உரோமர்கள் பாவித்த போர்கொடியில் இருந்த கழுகு ஒப்புமையில் குத்தர்கள்(குப்தர்; Guptas) பாவித்த கருட சின்னம் போன்றதே.
படம்:
https://www.facebook.com/Garuda2020/posts/205501183191609:0
வில்லவர் மற்றும் பாணர்
ReplyDeleteபாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.
இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.
பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.
வில்லவர் குலங்கள்
1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்
வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்
4. மீனவர்
பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா
1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.
2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.
3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.
4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.
பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.
பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.
பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.
வில்லவர் பட்டங்கள்
வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.
முக்கியத்துவத்தின் ஒழுங்கு
1. சேர இராச்சியம்
வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்
2. பாண்டியன் பேரரசு
வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்
3. சோழப் பேரரசு
வானவர்
வில்லவர்
மலையர்
பாணா மற்றும் மீனா
வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.
சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.
பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.
பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.
சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.
இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.
மஹாபலி
பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.
வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.
ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.
மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.
பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.
சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)
பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.
ஹிரண்யகர்பா சடங்கு
வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.
வில்லவர் பாணர்
ReplyDeleteநாகர்களுக்கு எதிராக போர்
கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.
நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு
நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
1. வருணகுலத்தோர்
2. குகன்குலத்தோர்
3. கவுரவகுலத்தோர்
4. பரதவர்
5. களப்பிரர்கள்
6. அஹிச்சத்ரம் நாகர்கள்
இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
கர்நாடகாவின் பாணர்களின் பகை
பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.
கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.
வில்லவர்களின் முடிவு
1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.
கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன
1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.
கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.
ஆந்திரபிரதேச பாணர்கள்
ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்
1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.
பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.
பாண வம்சத்தின் கொடிகள்
முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு
பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு