Friday, January 6, 2017

வீணா தண்டமென்று அழைக்கப்படும் முதுகெலும்பு 24

வீணா தண்டமென்று அழைக்கப்படும் முதுகெலும்பு 24 கோர்வ துண்டுகள் உள்ளது என்பது படத்தைப் பார்ப்பது மூலம் புரிந்து கொள்ள முடியும்...

அப்படியே வீணையில் உள்ள தண்டிலும் 24 மெட்டுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. 24 மெட்டுகளுக்கு மேல் தந்திகள் நிற்கும் மெட்டு வரையும் எவ்வளவு இடம் காலியிருக்கிறதோ அப்படியே முதுகெலும்பின் மேலுள்ள சிரசின் பாகமுமிருக்கிறது.

மேலும் அவரவரின் கைக்கு உடம்பு 8 சாணாயிருக்கிறது போல் கீழ் மூலத்தின் நடு மத்தியிலிருந்து மேல் மூலத்தின் மத்திவரை நாலு சாணாயிருக்கவேண்டும். அதன் கீழ் பாகம் கீழ் மூலத்தின் நடுமத்தியிலிருந்து பாதம் வரை நாலு சாணாயிருக்கும். அப்படியே வீணையின் மேருமுதல் மெட்டு வரையுமுள்ள முக்கிய பாகம் நாலு சாண் நீளமென்று அறிய வேண்டும்.

வீணைத் தண்டின் நீளம் மூன்று சாணாய் இருப்பதுபோல மனுஷனுடைய முதுகெலும்பும் முச்சாணாயிருக்கும். இந்த முச்சாண் நீளமே மனுஷனுடைய தலையின் சுற்றளவாகும்.

அது போலவே வீணைக் குடத்தின் சுற்றளவுமிருக்க வேண்டும்.

எப்படி மனுடசரீரம் தோல், எலும்பு, தசை, மூளை, சுக்கிலம், இரத்தம், மச்சை என்னும் ஏழு தாதுக்கள் பெற்று பூரணமாகிறதோ அப்படியே வீணையும் ஏழு தந்திகளினால் பூரணமடைகிறது.

No comments:

Post a Comment