Monday, December 5, 2016

அயல் மகரந்த சேர்க்கையில் தேன்வண்டின் வேலை

அயல் மகரந்த சேர்க்கையில் தேன்வண்டின் வேலை
பொதுவாக விவசாயத்தில் தன்மகரந்த சேர்க்கை, அயல்மகரந்த சேர்க்கை பயிர்கள் உள்ளன. தன் மகரந்த சேர்க்கை பயிர்கள் தானே பூத்து காய்க்கும்.
எடுத்துக்காட்டு ( கத்தரி, தக்காளி, வெண்டை, பருத்தி )
அயல்மகரந்த சேர்க்கை என்பது தேன் வண்டுகள் மூலம் மகரந்த துகள்களை எடுத்து வந்து மற்ற பயிர்களில் சோப்;பதற்கு அயல் மகரந்து சேர்க்கை எனப்படும்
உ.ம் ஒரு பூவில் தேன் வண்டுகள் தேனை எடுக்கும் பொழுது அதில் உள்ள மகரந்த துகள்கள் தேன் வண்டின் கால்களில் ஒட்டிக்கொள்ளும்.
அதே தேன்வண்டு மகரந்த துகள்களுடன் மற்ற பூ வில் தேனை குடிக்க வரும்பொழுது மகரந்த துகள்கள் அடுத்த பூவில் ஒட்டிக் கொள்ளும் இவற்றின் மூலம் அந்த பயிர் அயல்மகரந்த சேர்க்கை எற்பட்டு காய் வைக்கும் இவை அயல்மகரந்த சேர்க்கை பயிர் எனப்படும்.
எடுத்துக்காட்டு ( முருங்கை, கொடிவகை பயிர்கள், கண்வலி செடி முதலியவை )
இவற்றில் தேன் வண்டுகள் தேவைப்படுகிறது நாமே வயலில் தேனீ பெட்டி வளர்க்கலாம்.நமக்கு சுத்தமான தெனும் கிடைக்கும் பயிர்களில் மகசூலும் கூடும்
தேனி பெட்டி
இரண்டு ஏக்கருக்கு ஒரு தேனீ பெட்டி வைத்து தேனீக்களை வளர்த்து மகசூலைக் கூட்டலாம். தேனீக்களை வளர்க்க பயிற்சிகளும் கொடுக்கிறார்கள்
தேவைப்படுவோர் - தொடர்பு கொள்ள 9787787432

No comments:

Post a Comment