தென்னை சாகுபடியில் நாற்று உற்பத்தி
கற்பக விருட்சமாக அழைக்கப்படும் தென்னை ஒரு பல்லாண்டு பயிராகும்.தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப நாம தென்னை நடவு செய்து பண்ணையை செழிப்படைய வைக்கலாம்
தென்னை நாற்றங்கால் போட விதை தேர்வு செய்யக்கூடிய தென்னை மரம் நடவுசெய்து குறைந்தது 15 வருடங்களாவது இருக்க வேண்டும்; அதுவும் அந்த மரம் ஒரு வருடத்திற்கு 80 முதல் 100 காய்கள் காய்க்க கூடிய மரமாகவும் இருக்கனும் அவ்வாறு இருக்கும் மரத்தில் விதைகளை தேர்வு செய்யவேண்டும்.
நாற்றங்கால் அமைத்தல்
தென்னை நாற்று போடக்கூடிய நிழல்பகுதியாக இருக்கும் இடத்தை தேர்வு செய்து களை , கல் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் இல்லாமல் எடுத்து விட்டு நாற்றுக்களை 2.5 செமீட்டர் இடைவெளியில் தேங்காய்களை வரிசையாக வைத்து மணல், மண்கொண்டு மூடி தண்ணீர் பாய்ச்சி விடவும்.
நாற்று நன்றாக முளைக்க ஆரம்பித்தவுடன் 500 கேஜ் தடிமனுள்ள 60 X 40 செமீ. அளவுள்ள கருப்பு, சிவப்பு பாலுத்தீன் பைகளை வாங்கிவந்து
அடிப்பகுதியில் 8 முதல் 10 துளைகள் போட்டு பையின் உள்ளே 1:1:1 என்ற அளவில் நன்றாக மக்கிய தொழுவுரம் ஒரு கிலோ, மணல் ஒரு கிலோ, வயலின் மண் ஒரு கிலோ மூன்றையும் கலந்து
ஒரு பாலுத்தின் பைகளுக்கு 10-13 கிலோ வரை கலந்த கலவையை நிறப்பி முளைக்க வைத்த கன்றுகளை எடுத்து செங்குத்தாக இருக்குமாறு பாலுத்தீன் பைகளில் நடவு செய்து நன்றாக பையின் உள்ளே அமுக்கி விட வேண்டும்.
பிறகு பூ வாளியில் தண்ணீர் தெளித்து வரவும். 6 முதல் 8 மாதம் வரை உள்ள நாற்றுக்களை எடுத்து நடவு செய்யலாம்
பை நாற்றங்காலின் நன்மை
சூரிய வெப்பத்தின் கடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்
வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்
பூச்சி நோய் தாக்கம் குறையும், களைகள் அதிகம் வராது
தண்ணீர் தெளிக்க வசதியாகவும் இருக்கும்
Monday, December 5, 2016
தென்னை சாகுபடியில் நாற்று உற்பத்தி
Labels:
விவசாயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment