Monday, December 5, 2016

அரளி சாகுபடி

அரளி சாகுபடி
அரளி சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் நடவு செய்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளே ஆனா அரளி செடியை வெட்டி அப்புரப்படுத்துவார்கள்
அவர்களிடம் அரளி குச்சிகளை வாங்கி வந்து நிலத்தை தயார் செய்து வரிசைக்கு வரிசை 10 அடி அளவு இருக்குமாறு பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும்
பாத்திகளில் ஒரு வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்கு
செடி 1 அடி. இருக்குமாறு அரளி குச்சிகளை படத்தில் காட்டியவாடி மடித்து ஒரு வரிசையில் குச்சிகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி இரண்டு நுனி பாகங்களை மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ, ஆமணக்கு புண்ணாக்கு 50 கிலோ, கடலை புண்ணாக்கு 50 கிலோ கலந்து செடிக்கு அருகில் போட்டு மண்ணால் மூடிவிட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்
அரளியில் கசப்பு தன்மை இருப்பதால் பூச்சி நோய் தாக்குதல் இருக்காது
நடவு செய்த ஆறுமாத்தில் பூ வர ஆரம்பிக்கும் தினசரி மாலை வேளையில் பூக்கள் மலரும் முன்பாக முட்டையாக இருக்கும் போதே பூவை பரித்து பையில் போட்டு கட்டி தண்ணீர் தெளித்து வைக்கலாம்.
அரளி சாகுபடி செய்தால் அதிகம் செலவு இருக்காது.

No comments:

Post a Comment