Thursday, February 23, 2017

புளியங்கொட்டை ஒரு அற்புதமானக் கால்நடை தீவனம்.

#புளியங்கொட்டை ஒரு அற்புதமானக் கால்நடை தீவனம்.

புளியங்கொட்டைய வட சட்டியில போட்டு நல்லா வாசம் வரும்வரை வறுத்து எடு;க்க வேண்டும். வறுத்த புளியங்கொட்டைமேல் உப்பு கலந்த தண்ணியை தெளிச்சு ஈரத்துணியில் முளைக்கட்டி வைப்பது போல் வைத்துவிட வேண்டும்.

மறுநாள் காலையில் பார்த்தல் புளியங்கொட்டையின் தோல் நல்லா ஊறி இருக்கும். பின் கையால் நசுக்கி தோல் பிரித்து எடுத்து ஒரு மாட்டுக்கு 200 கிராம் புளியங்கொட்டையில் ஒரு கைப்பிடி வெல்லம் போட்டு மாட்டுக்கு தீவனமாக கொடுக்கலாம்.

200 கிராம் புளியங்கொட்டை ஒரு கிலோ புண்ணாக்குக்கு சமம். நோஞ்சானா இருக்குற மாட்டுக்கு கொடுத்தா கொழுகொழுன்னு மாறிடும். சினை பிடிக்காத மாடு சினைப் பிடிக்கும். ஆடுகளுக்கும் தினமும் 100 கிராம் அளவுக்கு கொடுக்கலாம்.

No comments:

Post a Comment