தண்டட்டி
இதை மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா்,இராமநாதபுரம் மாவட்ட மக்களும், பாப்படம் அல்லது பாம்படம் என்றழைத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களும் அணிந்து வந்தார்கள்
இந்த காதணி அணிவதற்காகவே காது வளர்க்க வேண்டியிருக்கும். இதற்காக அந்தக் காலப்பெண்கள் காது வளர்த்தனர்.
காதை எப்படி வளர்ப்பது என்பதனைப் பார்ப்போம் காது குத்திய பின் பனை ஓலையை சுருட்டி காது ஓட்டையில் திணிப்பர். பனை ஓலை விரிவடையும் போது காதின் ஓட்டையும் விரிவடையும். எட்டணா அளவுக்கு காது ஓட்டை விரிந்ததும், "சவுடி'யை (வட்ட வடிவிலான தங்கத்தோடு) தொங்க விடுவர். வசதிக்கு ஏற்ப சவுடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். காது மடல்களில் கொப்பு, முருகுகுச்சி, பச்சைக்கல் லோலாக்கு, எடைத்தட்டு, குருத்தட்டு, உனப்பு தட்டு என ஆறு அணிகலன்களை வரிசையாக மாட்டிக்கொண்டு அழகு சேர்ப்பர்.
அந்த நாட்களில் காது வளர்த்து தண்டட்டி மாட்டாத பெண்களை "மூளிகாதி' என்று சொல்வார்களாம். தவிர காது வளர்க்காத பெண்களை திருமணமும் செய்ய மாட்டார்களாம்.
இப்பொழுதே தண்டட்டி அணிந்த பெண்களை பார்ப்பது அபூர்வமாகி விட்ட நிலையில், இனி வரும் சந்ததியினர் புகைபடத்தில் மட்டுமே இதை காணமுடியும் .
இனி காதணி வகைகளையும் பார்ப்போம்
ஓலை, கடுக்கன், கம்மல், கற்பூ, காதோலை, குண்டலம், குதம்பை, குழை, கொப்பு, செவிப்பூ, செவிமலர், டோலாக்கு, லோலாக்கு, தண்டட்டி, தண்டொட்டி, தாடங்கம், தொங்கட்டான், தோடு, மகரகுண்டலம், மகுடம் (இந்தச் சொல், காதணி ஒன்றையும் குறிக்கும்), முருகு, வல்லிகை, வாளி, ஜிமிக்கி, ஒன்னப்பூ, கன்னப்பு, கர்ணப்பூ. கடைசியில் குறிப்பிட்ட மூன்றும் ஒன்றே
மேற்கண்ட பெயர்களில் இவைகளையெல்லாம் நம் முன்னோர்கள் காதில் அணிந்து அழகு சேர்த்தனர்.
No comments:
Post a Comment